Posts

Showing posts from March, 2023

Shirodara (சிரோதாரை)

Image
மனதையும் மூளையையும் சீராக்கும் சிரோ தாரை. தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, சித்தஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. சிரோதாரா (சிரோ - தலை ;  தாரா - பாய்ச்சல்) என்னும் சிகிச்சை முறை அனைத்து ஆயுர்வேத சிகிச்சைகளிலும்  மிகவும் தெய்வீகமானதாகக்  கருதப்படுகிறது. இந்த அற்புதமான உடல் நச்சு வெளியேற்ற முறையில் உச்சந்தலையில் மற்றும் நெற்றியில்  மெல்லிய சொட்டுக்களாக  மிதமான சூட்டில்  மருந்துஎண்ணெய் ஊற்றப் பட்டு மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலின் உள்ளுணர்வு அறிவை  விழிப்பூட்ட உதவும் மிகவும் தெய்வீக சிகிச்சைகள் ஒன்றாகும். ஆயுர்வேதத்தின்படி, வாதம் மற்றும் பித்தம்  சமநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிரோதாரா மிகவும் பயனளிக்கிறது.  சிரோதாரா செய்யும் சமயத்தில், நெற்றியில் எண்ணெய் ஊற்றுவதன் மூலம் நெற்றியில் அழுத்தம் மற்றும் அதிர்வலைகள் உருவாக்கப்படுகிறது. மூளையின் எலும்புகளிலுள்ள வெற்றிடத்தினால் இந்த அதிர்வு உரத்து ஒலிக்கிறது. இந்த அதிர்வுகள் செரிப்ரோ ஸ்பைனல் திரவம் (CSF) என்ற திரவத்தின்  மூலம்  உட்செலுத்தப் படுகிறது.  சிறிது வெப்ப