8 shaped walking. (8 வடிவ நடை பயிற்சி)



எட்டு போட்டு நடங்கப்பா.. முதுமை எட்டாமல் இளமையாஇருப்பீங்க...பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கண்டறிந்த பயிற்சிகள் எல்லாம் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு  அதன் ஆரோக்கியம் வெளிக் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொலிவு மாறாமல் புதுமையாக வருவதைப் போன்றுதான் இந்த 8 வடிவ நடைபயிற்சியும் இன்பினிட்டி(Infinity Walking) வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டுக்கே திரும்பி இருக்கிறது.

வடிவத்தில் 8 என்பது முடிவில்லாதது. அதனால் தான் எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழியும், எட்டுப்போடு எல்லாம் பறந்தோடும் என்று சித்தர்களும் கூறுகிறார்கள்.

பொதுவாக நடைப்பயிற்சி  உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும்.8 வடிவ  நடைப்பயிற்சி காலை அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது. நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.

ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது.இதன் போது காலில் செருப்பு  போடக் கூடாது. இதை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது நமது பாதத்தின்  மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு  உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

இந்த நடைப்பயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். ஏனென்றால்  இதன் போது நமது கண்கள் அந்த 8வடிவ கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம்  கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.

இப்பயிற்சியை நாம் பின் தொடர்வதன் மூலம் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன  இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய்,  நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.

இவற்றில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?

சாப்பிட்ட உடனே 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. 6 மாதம் கழித்து டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்பு  இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கற்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.

For consultation:

🏥MedLife AyuCare 🌿 

📞0757474754/0768713033

📌https://maps.app.goo.gl/ehdFV7D7sgvHQ8XY6

🌐https://www.facebook.com/profile.php?id=100088461489271&mibextid=ZbWKwL

🌐tiktok.com/@medlifeayurcare




Comments

Popular posts from this blog

Kati vasthi ( நாரி உழுந்து புறவளைய சிகிச்சை)

Food is Medicine ( உணவே மருந்து)

Leech therapy ( அட்டை விடல்)