Leech therapy ( அட்டை விடல்)
லீச் தெரபி.
அட்டைபூச்சி தெரபி ஒரு சித்த ஆயுர்வேத மருத்துவமாகும். அட்டைபூச்சியைக் கொண்டு வைத்தியம் செய்வது பண்டைய காலத்தில் இருந்தது.
19 ஆம் நூற்றாண்டில் இந்த வைத்தியம் பிரபலமாக பரவியிருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக நவீன மருத்துவங்கள் வளர்ச்சியடைந்ததும், இந்த அட்டை தெரபி நலிவடைந்தது. எனினும் 1960 பிறகு சில பகுதிகளில் இந்த அட்டை பூச்சி தெரபியை மீண்டும் ஆரம்பிக்கின்றனர்.
இதில் பல்வேறு நோய்களை அட்டைப் பூச்சி தீர்க்கிறது. இந்த வைத்தியத்திற்கு ஹிருடோதெரபி என்று பெயர்.
எவ்வாறு செயல்படுகிறது?
- பாதிக்கப்பட்ட இடங்களில் அட்டைப்பூச்சிகளை நேரடியாக விட்டுவிடுவார்கள்.
- இவை இதய நோய்களுக்கு, இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கு, முகப்பரு, சொட்டை முடியில் முடி வளர என பல்வெறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
- அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.
- ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது.
உடலில் செல்லிறப்பு அதிகமாக இருந்தால், அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்த அட்டைப் பூச்சிகள் அவைகளுக்கு தூண்டுதல் அளித்து, வேகமாக செயல்பட வைக்கிறது அத்துடன் மருந்துக்களாக பயன்படுகிறது.
அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.
அதேபோல், அதன் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் ஹிருடின் என்ற புரதம் உள்ளது. அவை புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவும் அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூட்டு சம்பந்தப்பட்ட நோயான ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸை குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயில் சொல்லத்தகுந்த முன்னேற்றம் கொடுக்கிறது. ஆனால் அட்டைப்பூச்சி தெரபியை தகுந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களே கையாள வேண்டும்.
For consultation:
🏥MedLife AyuCare 🌿
📞0757474754/0768713033
📌https://maps.app.goo.gl/ehdFV7D7sgvHQ8XY6
🌐https://www.facebook.com/profile.php?id=100088461489271&mibextid=ZbWKwL
🌐tiktok.com/@medlifeayurcare
Comments
Post a Comment