ஒற்றடம் (பத்ர பிண்ட சுவேதா)


சித்தஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை ஒத்தடம்(பத்ரபிண்ட ஸ்வேத/பத்ரபிண்ட பொட்டணி) சிகிச்சையானது வலி நிவாரணம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கிய  தாவர இலைகளை பல மூலிகைப் பொருட்களுடன் வறுத்து  சூடான மருந்து எண்ணெயில் தோய்த்து, வியர்வை ஏற்படும் வரை ஒரே நேரத்தில் உடல் முழுவதும் பிரயோகம் செய்யும் முக்கிய வியர்வையுண்டாக்கி செயல்முறையாகும்.

சிக்கலற்ற முதுகுவலியை நிர்வகிப்பதில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள சிகிச்சையாகும்.எண்ணெய் பிரயோகம் (ஒலியேஷன்), வியர்வை உண்டாக்கல்

( ஸ்வேதனா )மற்றும் மர்தனம் (மசாஜ்) ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த நடைமுறை தனித்துவமானது.

எப்படி இது செயல்படுகிறது:

பொட்டணிகளில் இருக்கும் மூலிகைகளின் அழற்சி எதிர்ப்பு குணம் பலவீனமான தசைகள் மற்றும் மூட்டுகளில் ஒரு அழற்சியை (தாபிதம்) குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பிரயோகிக்கும் வெப்பம் மற்றும் தொடர்ச்சியான ஒத்தடம் குருதி ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. 

இது  மூலிகைகளில் உள்ள மருத்துவகூறுகளின்  அகத்துறிஞ்சலை மேம்படுத்துகிறது, இது தசை தளர்த்தியாக செயல்படுகிறது, இதனால் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது.

பலன்கள்:

✓முதுகு மற்றும் முதுகு தசைகளை பலப்படுத்துகிறது.

✓உடல் வலி, பிடிப்பு மற்றும் விறைப்பு ஆகியவற்றை நீக்குகிறது.

✓வீக்கத்தைக் குறைக்கிறது.

✓இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

✓ மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

✓எலும்புகள், தசைகள், திசுக்கள் மற்றும் நரம்புகளை பலப்படுத்துகிறது மற்றும் புத்துயிர் பெறுகிறது.

✓நல்ல தூக்கத்தையண்டாக்கி

மன அழுத்தத்தை நீக்கும்.

✓சருமத்தின் பளபளப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்துகிறது.

பிரயோகிக்கப்படும் நோய்கள்:

✓‌முடக்கு வாதம் 

✓‌தண்டக வாதம்

✓‌சகன வாதம்

✓‌முள்ளந்தண்டு என்புகளுக்கிடையிலான நோய்கள்

‌ ✓ஒரு பகுதி அல்லது முழு மூட்டு செயல்பாடு இழப்பு 

✓‌தசை-எலும்பு வலி 

✓‌பேராசன நரம்பு தாபிதம் 

✓‌நாள்பட்ட முதுகுவலி சுளுக்கு மற்றும் பிடிப்புகள் 

✓‌விளையாட்டு காயங்கள் 

✓‌நரம்பியல் கோளாறுகள்

For consultation:

🏥MedLife AyuCare 🌿 

📞0757474754/0768713033

📌https://maps.app.goo.gl/ehdFV7D7sgvHQ8XY6

🌐https://www.facebook.com/profile.php?id=100088461489271&mibextid=ZbWKwL

🌐tiktok.com/@medlifeayurcare


Comments

Popular posts from this blog

Kati vasthi ( நாரி உழுந்து புறவளைய சிகிச்சை)

Food is Medicine ( உணவே மருந்து)

Leech therapy ( அட்டை விடல்)