Food is Medicine ( உணவே மருந்து)
"உணவே மருந்து மருந்தே உணவு"
மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது.
உணவே மருந்து எண்ணும் நிலை மாறி, மருந்தே உணவு எண்ணும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
"உணவே மருந்து உடலே மருத்துவர்"
என்பதுதான் நமது மரபுசார் வாழ்வியல் முறை. இன்றைக்கோ மருந்தாக கொள்ளத்தக்க உணவு முறையும் இல்லை. உடலே மருத்துவர் எனும் அளவு யாரிடமும் எந்த தெளிவும் இல்லை.
அஞ்சறைப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் வெந்தயம், சீரகம் ,மிளகு, சுக்கு , மஞ்சள்தூள் ஆகியவை எல்லாம் சிறந்த மூலிகைகள். உலகிலேயே மூலிகைகளை கொண்ட சமையலறை நம்முடையதாகத்தான் இருந்தது.
இவற்றை எல்லாம் விட்டு விட்டு நாகரீக மோகத்தால் உணவுமுறை தொடங்கி வாழ்வியலே மாறியதால் இன்று கணக்கில்லா நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலை மாற வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் ஒரேவழி மரபுசார் வாழ்க்கைக்கு திரும்புவதுதான். ஆனால் இந்த நவநாகரீக காலகட்டத்தில் முற்றாகவே100% இயற்கைவழி திரும்புவது என்பது சாத்தியம் இல்லை என்பது கசப்பான உண்மை என்றாலும் நாம் பாதியளவாவது மாற முயற்சிக்கலாம். இது குறித்த தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே எங்கள் பணி.
நன்றி.
For consultation:
🏥MedLife AyuCare 🌿
📞0757474754/0768713033
📌https://maps.app.goo.gl/ehdFV7D7sgvHQ8XY6
🌐https://www.facebook.com/profile.php?id=100088461489271&mibextid=ZbWKwL
🌐tiktok.com/@medlifeayurcare


Comments
Post a Comment