Posts

Shirodara (சிரோதாரை)

Image
மனதையும் மூளையையும் சீராக்கும் சிரோ தாரை. தலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, சித்தஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை. சிரோதாரா (சிரோ - தலை ;  தாரா - பாய்ச்சல்) என்னும் சிகிச்சை முறை அனைத்து ஆயுர்வேத சிகிச்சைகளிலும்  மிகவும் தெய்வீகமானதாகக்  கருதப்படுகிறது. இந்த அற்புதமான உடல் நச்சு வெளியேற்ற முறையில் உச்சந்தலையில் மற்றும் நெற்றியில்  மெல்லிய சொட்டுக்களாக  மிதமான சூட்டில்  மருந்துஎண்ணெய் ஊற்றப் பட்டு மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலின் உள்ளுணர்வு அறிவை  விழிப்பூட்ட உதவும் மிகவும் தெய்வீக சிகிச்சைகள் ஒன்றாகும். ஆயுர்வேதத்தின்படி, வாதம் மற்றும் பித்தம்  சமநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிரோதாரா மிகவும் பயனளிக்கிறது.  சிரோதாரா செய்யும் சமயத்தில், நெற்றியில் எண்ணெய் ஊற்றுவதன் மூலம் நெற்றியில் அழுத்தம் மற்றும் அதிர்வலைகள் உருவாக்கப்படுகிறது. மூளையின் எலும்புகளிலுள்ள வெற்றிடத்தினால் இந்த அதிர்வு உரத்து ஒலிக்கிறது. இந்த அதிர்வுகள் செரிப்ரோ ஸ்பைனல் திரவம் (CSF) என்ற திரவத்தின்  மூலம்  உட்செலுத்தப் படுகிறது.  சிறிது வெப்ப

ஒற்றடம் (பத்ர பிண்ட சுவேதா)

Image
சித்தஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை ஒத்தடம்(பத்ரபிண்ட ஸ்வேத/பத்ரபிண்ட பொட்டணி) சிகிச்சையானது வலி நிவாரணம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கிய  தாவர இலைகளை பல மூலிகைப் பொருட்களுடன் வறுத்து  சூடான மருந்து எண்ணெயில் தோய்த்து, வியர்வை ஏற்படும் வரை ஒரே நேரத்தில் உடல் முழுவதும் பிரயோகம் செய்யும் முக்கிய வியர்வையுண்டாக்கி செயல்முறையாகும். சிக்கலற்ற முதுகுவலியை நிர்வகிப்பதில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள சிகிச்சையாகும்.எண்ணெய் பிரயோகம் (ஒலியேஷன்), வியர்வை உண்டாக்கல் ( ஸ்வேதனா )மற்றும் மர்தனம் (மசாஜ்) ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த நடைமுறை தனித்துவமானது. எப்படி இது செயல்படுகிறது: பொட்டணிகளில் இருக்கும் மூலிகைகளின் அழற்சி எதிர்ப்பு குணம் பலவீனமான தசைகள் மற்றும் மூட்டுகளில் ஒரு அழற்சியை (தாபிதம்) குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பிரயோகிக்கும் வெப்பம் மற்றும் தொடர்ச்சியான ஒத்தடம் குருதி ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.  இது  மூலிகைகளில் உள்ள மருத்துவகூறுகளின்  அகத்துறிஞ்சலை மேம்படுத்துகிறது, இது தசை தளர்த்தியாக செயல்படுகிறது, இதனால் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. பலன்கள்

Nasiyam (நசியம்)

Image
நசியம்/நஸ்யம் சிகிச்சையானது   சித்த ஆயுர்வேதத்தில் தலைபகுதி மற்றும் நாசி பகுதிகளை சுத்திகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நாசா என்றால் மூக்கு என்று ஆர்த்தம். சிரசு என்றால் தலை ஆகும். தலையின் பிரதான வாசல் மூக்கு என்று சொல்லப்படுகிறது. நாசிக்கான மருந்துகள் நாசி பாதை வழியாக மூளைக்கு வந்து மூளையின் உயர் மையங்களில் செயல்பட்டு உடலில் நரம்பியல்(Nervous system) உட்சுரப்பியல்(Endocrine system) மற்றும் அதன் செயல்பாடுகளை சீராக்குகிறது. இந்த நஸ்யம் சிகிச்சையில் நெய், எண்ணெய், தூள், திரவ அல்லது புகை வடிவில் மூக்கு வழியாக செலுத்தப்படுகிறது. கிளாவிக்கிள்(Clavicle) மேல் அமைந்துள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சையில் இது மிகவும் பயனளிக்க கூடும். அதே நேரம் மறைமுகமாக இது எண்டோகிரைன் சுரப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் உடல் முழுவதும் ஆரோக்கியம் அளிக்கும். நாசி குழாயில் உள்ள நரம்பு முடிவுகளின் மூலம் அவை நரம்பு மண்டலத்தை அடையும் போது நரம்புகள் அமைதியடைகின்றன.  நன்மைகள் : ✓இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைத்து நிம்மதியான தூக்கத்துக்கு உதவுகின்றன. ✓நினைவ

Leech therapy ( அட்டை விடல்)

Image
  லீச் தெரபி. அட்டைபூச்சி தெரபி ஒரு சித்த ஆயுர்வேத மருத்துவமாகும். அட்டைபூச்சியைக் கொண்டு வைத்தியம் செய்வது பண்டைய காலத்தில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்த வைத்தியம் பிரபலமாக பரவியிருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக நவீன மருத்துவங்கள் வளர்ச்சியடைந்ததும், இந்த அட்டை தெரபி நலிவடைந்தது. எனினும் 1960 பிறகு சில பகுதிகளில் இந்த அட்டை பூச்சி தெரபியை மீண்டும் ஆரம்பிக்கின்றனர். இதில் பல்வேறு நோய்களை அட்டைப் பூச்சி தீர்க்கிறது. இந்த வைத்தியத்திற்கு ஹிருடோதெரபி என்று பெயர். எவ்வாறு செயல்படுகிறது? பாதிக்கப்பட்ட இடங்களில் அட்டைப்பூச்சிகளை நேரடியாக விட்டுவிடுவார்கள்.  இவை இதய நோய்களுக்கு, இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கு, முகப்பரு, சொட்டை முடியில் முடி வளர என பல்வெறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.  ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது.  உடலில் செல்லிறப்பு அதிகமாக இருந்தால், அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்த அட்டைப் பூச்சிகள் அவைகளுக்கு தூண்டுதல் அளித்து, வேகமாக செயல்பட வைக்கிறது அத்துடன் மருந்துக்களாக பயன்படுகிறது. அட்டைப்பூச்ச

Food is Medicine ( உணவே மருந்து)

Image
  "உணவே மருந்து மருந்தே உணவு" மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது. உணவே மருந்து எண்ணும் நிலை மாறி, மருந்தே உணவு எண்ணும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். "உணவே மருந்து உடலே மருத்துவர்" என்பதுதான் நமது மரபுசார் வாழ்வியல் முறை. இன்றைக்கோ மருந்தாக கொள்ளத்தக்க உணவு முறையும் இல்லை.      உடலே மருத்துவர் எனும் அளவு யாரிடமும் எந்த தெளிவும் இல்லை. அஞ்சறைப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் வெந்தயம், சீரகம் ,மிளகு, சுக்கு , மஞ்சள்தூள் ஆகியவை எல்லாம் சிறந்த மூலிகைகள். உலகிலேயே மூலிகைகளை கொண்ட சமையலறை நம்முடையதாகத்தான் இருந்தது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு நாகரீக மோகத்தால் உணவுமுறை தொடங்கி வாழ்வியலே மாறியதால் இன்று கணக்கில்லா நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலை மாற வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் ஒரேவழி மரபுசார் வாழ்க்கைக்கு திரும்புவதுதான். ஆனால் இந்த நவநாகரீக

Kati vasthi ( நாரி உழுந்து புறவளைய சிகிச்சை)

Image
சித்தா ஆயுர்வேதத்தில் உள்ள கடிவஸ்தி/நாரி உழுந்து புறவளையம்(Kati Vasthi) சிகிச்சையானது கீழ் முதுகுவலி(Lower Back pain) நபர்களுக்கு உதவுகிறது. வரையறையின்படி, Kati vasthi என்பது வெப்பம் மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி செய்யப்படும் கீழ் முதுகு  சிகிச்சை ஆகும். Medlife Ayucare இல், முதுகுவலி நிவாரணம் தேடும் நபர்களுக்கு அல்லது பஞ்சகர்மா  சிகிச்சையை மேற்கொள்ளும் நபர்களுக்கு kati vasthi சிகிச்சை  வழங்கப்படுகிறது. கடி வஸ்தி பலன்கள்: ✓இந்த சிகிச்சையானது கீழ் முதுகுவலி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ✓சிகிச்சை செயல்முறை தொடங்கும் போது, ​​மூலிகை எண்ணெய்களின் பண்புகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தசைகள் மற்றும் திசுக்களை குணப்படுத்தவும், ஊட்டமளிக்கவும் மற்றும் பலப்படுத்தவும் தொடங்குகின்றன. ✓சூடாக்கப்பட்ட மூலிகை எண்ணெய்கள் உறிஞ்சப்படுவதால், அவை மூட்டுகளை மென்மையான மற்றும் சிரமமற்ற இயக்கத்திற்கு உதவுகிறது, இறுதியில் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை தொடர்பான சிக்கல்களை தீர்க்கும். ✓ முள்ளந்தண்டிடை வட்ட தட்டு நசிவு,விலகல்(Intervertebral Disc bulging, Herniatio

8 shaped walking. (8 வடிவ நடை பயிற்சி)

Image
எட்டு போட்டு நடங்கப்பா.. முதுமை எட்டாமல் இளமையாஇருப்பீங்க...பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கண்டறிந்த பயிற்சிகள் எல்லாம் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு  அதன் ஆரோக்கியம் வெளிக் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொலிவு மாறாமல் புதுமையாக வருவதைப் போன்றுதான் இந்த 8 வடிவ நடைபயிற்சியும் இன்பினிட்டி(Infinity Walking) வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டுக்கே திரும்பி இருக்கிறது. வடிவத்தில் 8 என்பது முடிவில்லாதது. அதனால் தான் எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்னும் பழமொழியும், எட்டுப்போடு எல்லாம் பறந்தோடும் என்று சித்தர்களும் கூறுகிறார்கள். பொதுவாக நடைப்பயிற்சி  உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும்.8 வடிவ  நடைப்பயிற்சி காலை அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது. நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது.இதன் போது காலில் செருப்பு  போடக் கூடாது. இதை வெறும் காலில