ஒற்றடம் (பத்ர பிண்ட சுவேதா)
சித்தஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகை ஒத்தடம்(பத்ரபிண்ட ஸ்வேத/பத்ரபிண்ட பொட்டணி) சிகிச்சையானது வலி நிவாரணம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கிய தாவர இலைகளை பல மூலிகைப் பொருட்களுடன் வறுத்து சூடான மருந்து எண்ணெயில் தோய்த்து, வியர்வை ஏற்படும் வரை ஒரே நேரத்தில் உடல் முழுவதும் பிரயோகம் செய்யும் முக்கிய வியர்வையுண்டாக்கி செயல்முறையாகும். சிக்கலற்ற முதுகுவலியை நிர்வகிப்பதில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள சிகிச்சையாகும்.எண்ணெய் பிரயோகம் (ஒலியேஷன்), வியர்வை உண்டாக்கல் ( ஸ்வேதனா )மற்றும் மர்தனம் (மசாஜ்) ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த நடைமுறை தனித்துவமானது. எப்படி இது செயல்படுகிறது: பொட்டணிகளில் இருக்கும் மூலிகைகளின் அழற்சி எதிர்ப்பு குணம் பலவீனமான தசைகள் மற்றும் மூட்டுகளில் ஒரு அழற்சியை (தாபிதம்) குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் பிரயோகிக்கும் வெப்பம் மற்றும் தொடர்ச்சியான ஒத்தடம் குருதி ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகைகளில் உள்ள மருத்துவகூறுகளின் அகத்துறிஞ்சலை மேம்படுத்துகிறது, இது தசை தளர்த்தியாக செயல்படுகிறது, இதனால் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. பலன்கள்